சென்னையில் மார்ச் மாதம் மட்டும் 17.31 லட்சம் பேர் விமானங்களில் பயணம்:” சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை: சென்னை விமான நிலையத்தில், கடந்த மாதம் 17 லட்சத்து 31 ஆயிரத்து 770 பயணிகள், 12 ஆயிரத்து 22 விமானங்களில் பயணம் செய்துள்ளனர். சென்னையில் இருந்து பல்வேறு நாடுகள், நகரங்களுக்கு அதிகளவு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதனால், சமீபகாலமாக விமான பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது. அந்த வகையில், சென்னை விமான நிலையத்தில், மார்ச் மாதம் மட்டும் 17 லட்சத்து 31 ஆயிரத்து 770 பயணிகள், 12 ஆயிரத்து 22 விமானங்களில் பயணம் செய்துள்ளனர். அதில் உள்நாட்டு பயணிகள் 12 லட்சத்து 89 ஆயிரத்து 995 பேர். இவர்கள் 9 ஆயிரத்து 413 விமானங்களிலும், சர்வதேச பயணிகள் 4 லட்சத்து 41 ஆயிரத்து 775 பேர் 2 ஆயிரத்து 609 விமானங்களிலும் பயணம் செய்துள்ளனர்.

இந்த பயணிகளில் பெரும்பாலானோர் சுற்றுலாப்பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தொழில், வர்த்தகம், பணிகளின் நிமித்தம் செல்லும் பயணிகளும் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கோடை விடுமுறை காலத்தில் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். அதிலும், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்கும் என்று தெரிகிறது. தென் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் அதிகபட்ச, பயணிகள், விமானங்களுடன், சென்னை விமான நிலையம் முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சுபமுகூர்த்த தினமான இன்று முன்பதிவு வில்லைகள் கூடுதலாக ஒதுக்கீடு: பத்திரப்பதிவு துறை தகவல்

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தும் முடிவில் தலையிட முடியாது: ஐகோர்ட் உத்தரவு

கழுகுகள் இறப்புக்கு காரணமான மருந்துகளை கால்நடைகளுக்கு பயன்படுத்த தடை உள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்