17 டாஸ்மாக் கடைகள் மூடி சீல் வைப்பு

சேலம்:தமிழ்நாட்டில் மொத்தம் 5 ஆயிரத்து 329 மதுக்கடைகள் உள்ளன. இதில் 500 கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுப்பு பணி நடந்தது. எந்தெந்த கடைகளை மூடலாம் என்பது குறித்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. ஒவ்வொரு மண்டலத்திலும் எத்தனை கடைகள் மூடப்பட உள்ளன? அவை எந்தெந்த கடைகள் என்ற பட்டியல் மண்டல மேலாளர்கள் மூலம் பெறப்பட்டது. இந்நிலையில், 500 சில்லறை விற்பனை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று ேநற்று முன்தினம் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது. அதன்படி சேலம் மண்டலத்திற்குட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று 59 கடைகளை அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர். சேலத்தில் பிரட்ஸ் ரோடு முள்ளுவாடி கேட், குகை அப்சரா இறக்கம், லீ பஜார், செவ்வாய்பேட்டை, வெங்கடப்பரோடு, நெத்திமேடு, திருச்சி மெயின்ரோடு வேலுநகர், சந்தைபேட்டை மெயின்ரோடு, சிவதாபுரம் சித்தர் கோயில்மெயின் ரோடு, கந்தம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 9 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. இதைதவிர மாவட்டத்தில் 5 கடையும், பேரூராட்சியில் தலா ஒரு கடையும், 3 ஊராட்சிகளில் தலா ஒரு கடையும் சேர்த்து மொத்தம் 17 கடைகள் மூடப்பட்டது. இந்த கடைகளை நேற்று அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். கடைகளில் மதுபான பெட்டிகள் இருப்பதால் கடைகளுக்கு முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது குறித்து சேலம் டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், ‘‘தமிழ்நாடு அரசு உத்தரவின்படி சேலம் மாவட்டத்தில் 17 டாஸ்மாக் கடைகள் நேற்று மூடப்பட்டது. அந்த கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டது. இந்த கடைகளில் உள்ள மதுபானங்கள் அருகில் உள்ள கடைகளுக்கும், டாஸ்மாக் குடோன்களுக்கு ஓரிரு நாளில் கொண்டு செல்லப்படும். இங்கு பணிபுரிந்த மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள் வேறு கடைகளுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர்,’’ என்றனர்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து