17 கடைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை

சேலம்: சேலம் மாவட்டம், மாநகர பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்களை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். கைதாகும் நபர்களின் கடைகளை பூட்டி சீல் வைக்கும் பணியையும், போலீசாருடன் இணைந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம், சேலம் மாநகரில் கோமிங் ஆப்ரேஷனில் போலீசார் ஈடுபட்டனர். இதில், மதுவிலக்கு போலீசார் சந்த கடைகளில் மது விற்றதாக 78 வழக்கு பதிவு செய்து 78 பேரை கைது செய்தனர். இதே போல், தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை விற்ற 17 கடைகள் மீது வழக்குப்பதிவு செய்து, அந்த கடைகளில் இருந்து குட்கா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து 17 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். தடைசெய்யப்பட்ட குட்கா விற்ற கடைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் சீல் வைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை