17 வயது பள்ளி மாணவனை ஏமாற்றி திருமணம் செய்த ஆசிரியை போக்ஸோ சட்டத்தில் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே 11-ம் வகுப்பு மாணவனை ஏமாற்றி திருமணம் செய்த 26 வயது ஆசிரியையை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் கடந்த 5-ம் தேதி பள்ளிக்கு சென்று மாலை வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக மாணவரின் பெற்றோர்கள் துறையூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் ஷர்மிளாவுடன் அந்த மாணவர் சென்றிருப்பது தெரியவந்தது. ஆசிரியையின் செல்போனை வைத்து ஆய்வு செய்ததில் இருவரும் திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி என பல இடங்களில் சுற்றியது தெரிய வந்துள்ளது. இறுதியில் திருச்சி  எடமலைப்பட்டி புதூரில் இருவரும் தங்கி இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். தோழி வீட்டில் தங்கி இருந்த ஆசிரியை ஷர்மிளா மற்றும் மாணவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தஞ்சாவூர் கோயிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியை ஷர்மிளாவை போக்ஸோ சட்டத்தில் கைது செய்த முசிறி அனைத்து மகளிர் காவல்துறையினர் மாணவரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்….

Related posts

தனியார் பள்ளியில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி ரூ.12.23 கோடி மோசடி வழக்கில் பெண் கல்வி அதிகாரி கைது

குழந்தையுடன் மனைவி மாயம் மாமியார், மூதாட்டியை வெட்டி கொன்ற மருமகன்

ஜாதி மறுப்பு திருமணம் செய்ய முயன்ற காதல் ஜோடியை காரில் கடத்தி காதலன் மீது கொடூர தாக்குதல்: பணம், செல்போன் பறித்து சித்ரவதை; நாதக மாநில நிர்வாகி உட்பட 3 பேர் கைது