16 சட்டமன்ற தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு சென்னையில் 38,68,178 வாக்காளர்கள்: அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 3,07,460 பேர்; குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1,70,254 பேர்

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆணையர் லலிதா, நேற்று வெளியிட்டார். இதில், சென்னை மாவட்டத்தில் 38,68,178 வாக்காளர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆணையர் லலிதா, நேற்று ரிப்பன் மாளிகை கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் லலிதா கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் 1.1.24ம் தேதியினை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு, 2024ம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, இச்சுருக்க முறை திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு வாக்காளர் பட்டியல் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள் குறித்த விவரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா அல்லது இல்லையா என்பது குறித்து சரிபார்த்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் 1.1.24 அன்று 18 வயது பூர்த்தி அடைபவர்கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்தும், பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7-ஐ பூர்த்தி செய்தும், சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் உள்ளவர்களும், மேலும் வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தங்கள் செய்ய படிவம் 8-ஐ பூர்த்தி செய்தும் அதற்கான ஆவண ஆதார நகலினை இணைத்தும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர், சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் 27.10.2023 முதல் 9.12.2023 முடிய உள்ள காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம்.

நவம்பர் 4, 5, 18 மற்றும் 19 (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்) ஆகிய நாட்களில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. அந்த முகாம் நாட்களையும் படிவங்கள் 6, 6A, 7 மற்றும் 8 ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், பொதுமக்கள் இணையதளம் மூலமாகவும் தங்களுடைய பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம். https://voters.eci.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். சென்னை மாவட்டத்தில் 3,719 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதிகபட்சமாக பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 284 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் 169 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு ஏற்கனவே 5.1.2023 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர்கள் பட்டியலின்படி 19,09,512 ஆண் வாக்காளர்கள், 19,71,653 பெண் வாக்காளர்கள், 1,112 இதர வாக்காளர்கள் என மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 38,82,277 ஆகும். நடைபெற்று முடிந்த தொடர் திருத்தத்தில் சென்னை மாவட்டத்தில் 16,935 ஆண் வாக்காளர்கள், 17,911 பெண் வாக்காளர்கள், 20 இதர வாக்காளர்கள் என மொத்தம் 34,866 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், 24,536 ஆண் வாக்காளர்கள், 24,415 பெண் வாக்காளர்கள் மற்றும் 12 இதர வாக்காளர்கள் என மொத்தம் 48,963 வாக்காளர்களின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நடைபெற்று முடிந்த தொடர் திருத்தத்தில் 19,09,911 ஆண் வாக்காளர்கள், 19,65,149 பெண் வாக்காளர்கள் மற்றும் 1,118 இதர வாக்காளர்கள் என மொத்தம் 38,68,178 வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் 1,70,254 வாக்காளர்களும், அதிகபட்சமாக வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் 3,07,460 வாக்காளர்களும் உள்ளனர். ஜனநாயகத்தினை வலுப்படுத்த, தகுதியுள்ள அனைத்து பொதுமக்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற ஏதுவாக வரைவு வாக்காளர் பட்டியலினை பார்வையிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்கள்) (பொ) குலாம் ஜிலானி பாபா, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* 19,09,91 ஆண் வாக்காளர்கள்.
* 19,65,149 பெண் வாக்காளர்கள்.
* 1,118 இதர வாக்காளர்கள்

தொகுதி ஆண்
வாக்காளர்கள் பெண்
வாக்காளர்கள் மூன்றாம் பாலின
வாக்காளர்கள் மொத்தம்
ஆர்.கே.நகர் 1,14,638 1,23,133 105 2,37,876
பெரம்பூர் 1,36,533 1,40,987 77 2,77,597
கொளத்தூர் 1,36,329 1,42,467 72 2,78,868
வில்லிவாக்கம் 1,16,286 1,20,669 61 2,37,016
திரு.வி.க.நகர் 1,03,608 1,09,696 53 2,13,357
எழும்பூர் 93,802 95,545 56 1,89,403
ராயபுரம் 92,761 96,852 63 1,89,676
துறைமுகம் 88,385 81,810 59 1,70,254
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி 1,13,256 1,17,236 46 2,30,538
ஆயிரம் விளக்கு 1,13,805 1,18,767 100 2,32,672
அண்ணாநகர் 1,32,467 1,37,704 88 2,70,259
விருகம்பாக்கம் 1,37,599 1,38,753 89 2,76,441
சைதாப்பேட்டை 1,30,888 1,35,547 87 2,66,522
தி.நகர் 1,12,898 1,15,901 44 2,28,843
மயிலாப்பூர் 1,26,724 1,34,634 38 2,61,396
வேளச்சேரி 1,51,932 1,55,448 80 3,07,460
மொத்தம் 19,01,911 19,65,149 1,118 38,68,178

Related posts

உலகக்கோப்பையுடன் தாயகம் புறப்பட்ட இந்திய வீரர்கள்!!

யூரோ கோப்பை கால்பந்து: ஆஸ்திரியாவை வீழ்த்தி கால் இறுதிக்கு துருக்கி தகுதி

அமாவாசை, வார இறுதியையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை தகவல்