தமிழ்நாட்டில் 16,000 கிலோ போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: போதைப் பொருள் குறித்து தமிழ்நாடு இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். போதைப் பொருளை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அக்கறை மிகுந்த எண்ணத்தோடு போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டம் தொடங்கி செயல்பட்டு வருகின்றது.

போதைக்கு அடிமைனவர்கள் அனைவருக்கும் சுமையாக உள்ளனர். பள்ளி, கல்லூரி அருகே போதைப் பொருள் விறக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்று முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் விற்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதைப் பொருளை ஒழிக்க புதிய உத்திகள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

போதைப் பொருட்கள் பயன்படுத்துபவர்களால் அவர்களது குடும்பங்கள் மட்டுமின்றி அவர்களை சுற்றியுள்ளவர்களை பாதிக்கப்படுகின்றனர் என்று தெரிவித்துள்ளார். தற்போது வரை தமிழ்நாட்டில் 16,000 கிலோ போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் சொத்துகள் முடக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார். போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை அதிகபப்டுத்த வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அண்டை மாநிலங்களில் இருந்து போதைப் பொருட்களை கடத்தி வருவது போன்றவற்றையும் கண்காணிக்க தீவிர நடவடிக்கை எடுக்கபப்ட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கபப்ட்டு வருகிறது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்