பயணிகளின் பேருந்து சேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு 1666 அடிச்சட்டங்கள் கொள்முதல் செய்வதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது : போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்

சென்னை: முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி ரூ.371.16 கோடி மதிப்பீட்டில் 1666 புதிய பேருந்துகளின் அடிச்சட்டங்கள் கொள்முதல் செய்வதற்கு உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து கழகங்களின் பேருந்துகளை மேம்படுத்திடும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு (விழுப்புரம்-344, சேலம்-84, கோயம்புத்தூர்-263. கும்பகோணம்-367, மதுரை-350, திருநெல்வேலி-242) என மொத்தமாக நகர மற்றும் புறநகர் பேருந்து சேவைகளுக்காக 1650 அடிச்சட்டங்கள் கொள்முதல் செய்வதற்கும்.

மலைவாழ் மக்களின் போக்குவரத்து போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு (கோயம்புத்தூர்) கழகத்திற்கு பிரத்யேகமான 16 அடிச்சட்டங்களும் ஆக மொத்தமாக 1666 அடிச்சட்டங்கள் கொள்முதல் செய்வதற்கு உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிகளின் மூலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் மூலமாக வழங்கப்படும் பொதுப் பேருந்து சேவைகள் நாட்டில் முதன்மையான நிலைக்கு உயர்ந்திடும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு