தமிழ்நாட்டில் 15 இடங்களில் 100 டிகிரி வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 15 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் சுட்டெரித்தது. தமிழ்நாட்டில் தற்போது கத்திரி வெயில் காலம் நடக்கிறது. இந்நிலையில், வங்கக் கடலில் உருவான புயல் தற்போது மியான்மரில் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடக்கும் போது வங்கக் கடல் பகுதியில் இருந்து ஈரப்பதத்தை அதிகமாக உறிஞ்சியதால், இந்தியாவின் தரைப்பகுதியில் காற்றில் ஈரப்பதம் குறைத்து வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெப்பம் அதிகரிக்கத் வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சென்னை மீனம்பாக்கத்தில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. நேற்று மீனம்பாக்கத்தில் 109 டிகிரி வெயில் கொளுத்திய நிலையில் இன்று சற்று வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று 99 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. வேலூர், திருத்தணியில் இன்று 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. திருவண்ணாமலையில் 103 டிகிரி, சேலத்தில் 100 டிகிரி, ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. மதுரை விமான நிலையம் 104, திருச்சி – 103, பாளையங்கோட்டை 102, தஞ்சை 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

கரூர் பரமத்தி – 106, பரங்கிப்பேட்டை 105, மதுரை நகரம் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. திருப்பத்தூர் 102, ஈரோடு 101, கடலூர் – 100, தருமபுரி – 100, சேலத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது.

Related posts

டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

ரிஷி சுனக் மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா?.. இன்று நடைபெறும் இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் 107 இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் போட்டி..!!

பீகாரில் உள்ள அனைத்து பாலங்களின் உறுதி தன்மையை ஆராய உயர்மட்டக் குழு அமைக்க அரசுக்கு உத்தரவிடுக : உச்சநீதிமன்றத்தில் மனு!!