156 வாகனங்கள் ஏலம் விட்டதில் ரூ.6.84 லட்சம் அரசுக்கு வருவாய்

தாம்பரம்: வரி மற்றும் அனுமதி சீட்டு இல்லாமல் இயக்கப்பட்ட 156 வாகனங்கள், போக்குவரத்து துறை அதிகாரிகளால், வாகன சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்டன. நீண்ட நாட்களாக விடுவிக்கப்படாமல், தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகம் மற்றும் குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து பணிமனை வளாகத்தில் இவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மேற்படி, அந்த வாகனங்களை தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது. ஏராளமானோர் கலந்துகொண்டு வாகனங்களை ஏலத்தில் எடுத்தனர். இதில் போக்குவரத்து துறைக்கு ரூ.6.84 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் தெரிவித்தார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை