15ம் தேதி தொடங்குகிறது திருத்துறைப்பூண்டி பகுதியில் எள், பருத்தி பயிர்கள் பாதிப்பு

 

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் தற்போது கோடை மழை அதிக அளவு பெய்துள்ளது. இதனால் பூத்து காய்க்கும் நிலையில் இருந்த எள் வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தேசிங்குராஜபுரம் கிராமத்தில் எம்எல்ஏ மாரிமுத்து, முன்னாள் எம்எல்ஏ உலகநாதன் ஆகியோர் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர். பின்னர் எம்எல்ஏ மாரிமுத்து கூறுகையில்: மானாவாரி பயிரான எள் பயிரில் அதிக அளவு நீர் தேங்கி இருப்பதால் பயிர் வாட தொடங்கியுள்ளது, மழை விட்டாலும் தேங்கியுள்ள தண்ணீர் வடிவதற்குள் அனைத்து எள் பயிரும் வதங்கி பட்டுப் போயிருக்கின்றன.

திருத்துறைப்பூண்டி, கோட்டூர் மற்றும் முத்துப்பேட்டை வட்டாரங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள எள் பயிர் மற்றும் பருத்தி பயிர்கள் சேதமடைந்துள்ளது. ஒரு ஏக்கருக்கு எள் பயிருக்கு எட்டாயிரமும், ஒரு ஏக்கர் பருத்தி சாகுபடிக்கு ரூ. இருபத்தி ஐந்தாயிரமும் செலவு செய்துள்ளனர். கோடை மழையால் முற்றிலுமாக எள், பருத்தி பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே வேளாண்மை துறை மூலம் கள ஆய்வு செய்து உரிய இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட மன்ற உறுப்பினர் என்ற முறையில் அரசுக்கு கடிதம் எழுதுகிறேன் என்றார்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை