செக்குடியரசு பல்கலைக்கழக துப்பாக்கி சூட்டில் 14 பேர் பலி: அரங்கேற்றிய மாணவர் சுட்டுக் கொலை

பிரேக்: செக் குடியரசு நாட்டின் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. செக் குடியரசின் பிரேக் நகரில் உள்ள சார்லஸ் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. அந்த பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவர் டேவிட் கொசாக் (24) என்பவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக அந்நாட்டு உள் துறை அமைச்சர் விட் ரகூசன் கூறுகையில், ‘மக்கள் போலீசாருடன் ஒத்துழைக்க வேண்டுகிறேன். குற்றச் செயலில் ஈடுபட்ட நபர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளார். இருப்பினும் வளாகம் முழுவதும் போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில் 30 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். பிரதமர் பீட்டர் ஃபியாலா தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு பிரேக் நகருக்கு விரைந்துள்ளார். துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மாணவர் வரலாறு பாடம் படித்துவந்தார். துப்பாக்கிச் சுடுதலில் ஈடுபட்ட மாணவர் டேவிட் கொசாக் படிப்பில் சிறந்து விளங்கியுள்ளார். அவருக்கு இதுவரை எந்த குற்றப் பின்னணியும் இல்லை’ என்று கூறினார்.

Related posts

மருந்தகத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

பைக் ரேஸில் தகராறு: இளைஞருக்கு கத்திக்குத்து

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பணிகள் குறித்து அரசிதழில் வெளியீடு