பரபரப்பாகும் தேர்தல் களம்; அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்: பாஜகவில் இன்று இணையும் 14 முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள்

டெல்லி: தமிழ்நாட்டின் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைகின்றனர். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடன் திமுக தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதேநேரத்தில், அதிமுக, பாஜ கட்சிகள் இன்னும் கூட்டணியை இறுதி செய்யாமல் தவித்து வருகின்றன.

தமிழ்நாட்டில் பாஜக பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் அண்ணாமலை இன்று டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கிடையே, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன் உள்பட 14 முன்னாள் எம்எல்ஏக்களும், காங்கிரஸின் முன்னாள் எம்எல்ஏ தங்கராசும் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கு.வடிவேல் – கரூர், P.S. கந்தசாமி – அரவக்குறிச்சி, கோமதி சீனிவாசன் (முன்னாள் அமைச்சர்) – வலங்கைமான், R.சின்னசாமி -சிங்காநல்லூர், R. துரைசாமி (எ) சேலஞ்சர் துரை -கோயம்புத்தூர், M.V.ரத்தினம் – பொள்ளாச்சி,

S.M.வாசன் – வேடச்சந்தூர், S.முத்துகிருஷ்ணன் – கன்னியாகுமரி, P.S. அருள் – புவனகிரி, N.R.ராஜேந்திரன், R.தங்கராசு – ஆண்டிமடம், குருநாதன், V.R. ஜெயராமன் – தேனி, பாலசுப்ரமணியன் – சீர்காழி, சந்திரசேகர் – சோழவந்தான் ஆகியோர் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, தமிழக மேலிடப் பொறுப்பாளர்கள், தமிழக தலைவர் கே.அண்ணாமலை உள்ளிட்டோர் முன்னிலையில் பாஜகவில் இன்று இணையவுள்ளனர்.

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்