கரூர், அக். 4: வாங்கல் குப்பிச்சிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மாரிகவுண்டம்பாளையதில் கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி சுரேஷ்குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜெயந்தி பிரவீன்குமார், சப்இன்ஸ்பெக்டர் பானுமதி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் ராதாகிருஷ்ணன் கிராம சபை கூட்டத்தில் தூய்மை குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல்.

மக்களோடு சேர்ந்து மக்கள் திட்டமிடல் இயக்கம். மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. பொதுமக்களிடம் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து பாதிக்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி சுரேஷ்குமார் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி பரிசு வழங்கினார். வார்டு உறுப்பினர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பானுமதி கொண்டு இரவு நேரங்களில் தனி நபராக பெண்கள் வர நேர்ந்தால் 181, மற்றும் 1091 ஆகிய எண்களுக்கு அழைத்தால் உங்களை பாதுகாப்பாக அவர்களின் வீட்டுக்கு கொண்டு விடப்படும் என தெரிவித்தார். மற்றும் வார்டு உறுப்பினர்கள், வாங்கல் குப்புச்சிபாளையம் ஊராட்சி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related posts

திருநின்றவூர் ஏரியில் ₹50 லட்சம் மதிப்பில் மதகுகளை சீரமைத்து, கால்வாய் சுத்தம் செய்யும் பணி தீவிரம்: நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி ஆர்எம்கே பள்ளி மாணவனுக்கு தங்கம்

கும்மிடிப்பூண்டி அருகே பயங்கரம்; ஓசியில் பொருள் கொடுக்காத ஆத்திரத்தில் மளிகைக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு