14 கிலோ பெட்டி 30 ரூபாய் தான் விலையின்றி கால்நடை தீவனமாகும் தக்காளி-பழநி விவசாயிகள் கவலை

பழநி : திண்டுக்கல் மாவட்டம், பழநி மற்றும் தொப்பம்பட்டி பகுதியில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன், விண்ணை தொட்ட தக்காளி விலை தற்போது கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. 14 கிலோ தக்காளி பெட்டி ரூ.30க்கு விலை போகிறது. இதனால், பறிப்பு கூலி கூட கிடைக்காது என, தக்காளியை பறிக்காமல் செடிகளிலேயே விட்டுவிட்டனர். தக்காளி கால்நடைகளுக்கு தீவனமாகி உள்ளது.கொழுமங்கொண்டான் தக்காளி விவசாயி திருநாவுக்கரசு கூறியதாவது,தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. தோட்டத்தில் பறிக்கும் தக்காளிகளை பழநி, ஒட்டன்சத்திரம் சந்தைகளில் விற்பனை செய்கிறோம். அங்கு 14 கிலோ தக்காளி பெட்டி ரூ.30க்கு விலை போகிறது. பறிப்புக்கூலி, வண்டி வாடகை, சந்தையில் சுங்கவரி, இறக்குக்கூலி என கணக்குப் பார்த்தால் நட்டத்திற்குதான் விற்க வேண்டி வருகிறது. எனவே, செடிகளிலேயே பறிக்காமல் விட்டுவிட்டோம். தக்காளி விலை திடீரென விண்ணை முட்டும் அளவிற்கு உயர்கிறது. திடீரென அதளபாதாளத்திற்கு செல்கிறது.இதனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, தக்காளிக்கு அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தக்காளியை மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்பனை செய்யும் வகையில் பழநி பகுதியில் தக்காளி சாஸ் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

அதிகம் லாபம் தரும் செம்மறி ஆட்டு கிடாய்கள்

கட்டிமேடு அரசுபள்ளியில் சர்வதேச ஓசோன் தின உறுதிமொழி ஏற்பு

சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 118 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு