14 அப்பாவி மக்கள் சுட்டுக்கொலை: துணை ராணுவ வீரர்களிடம் விசாரணை நடத்த அனுமதி

ெகாஹிமா:  நாகலாந்தில் தீவிரவாதிகள் என நினைத்து 14 அப்பாவிகளை சுட்டுக் கொன்றது தொடர்பாக, துணை ராணுவ வீரர்களிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்துவதற்கு ராணுவம் அனுமதி அளித்துள்ளது. நாகலாந்து மாநிலம், மோன் மாவட்டத்தில் கடந்த 4ம் தேதி வாகனத்தில் சென்ற அப்பாவி தொழிலாளர்களை தீவிரவாதிகள் என நினைத்து துணை ராணுவம் நடத்திய தாக்குதலில் 14 பேர் பலியாகினர்.  இதை தொடர்ந்து அந்த கிராம மக்கள் வன்முறை ஈடுபட்டனர். அவர்கள் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த வீரர் ஒருவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். பாதுகாப்பு படையினரால் பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடத்த, சிறப்பு புலனாய்வு குழுவை இம்மாநில முதல்வர் நெபியு ரியோ அமைத்துள்ளார். இக்குழு நேற்று தனது விசாரணையை தொடங்கியது. தாக்குதல் நடத்திய துணை ராணுவ பிரிவின் வீரர்களிடமும் இக்குழு விசாரணை நடத்துவதற்கு ராணுவம் அனுமதி அளித்துள்ளது. இதன் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என ராணுவம் தெரிவித்துள்ளது….

Related posts

ரிமோட் கண்ட்ரோல்

விண்கலம் (Spacecraft)

கார் நிறுவனங்கள் தள்ளுபடி அறிவிப்பு