முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம்

விருதுநகர், ஜூன் 21: பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வு தொகை கிடைக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்ட தகவல்: முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில், விருதுநகர் மாவட்டத்தில் பதிவு செய்து 18 வயது நிரம்பிய முதிர்வுத்தொகை கிடைக்காத பயனாளிகளுக்கு முதிர்வுத்தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலங்களில் உள்ள சமூகநல விரிவாக்க அலுவலர்களிடம் முதிர்வுத்தொகைக்கான ஆவணங்களான வைப்புநிதி பத்திரம், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், பயனாளியின் வங்கி கணக்கு புத்தகம் நகல், பயனாளியின் வண்ணப் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை