1374 விவசாயிகள் பயன் திருமயம் ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கூடுதல் ஆட்சியர் ஆய்வு

புதுக்கோட்டை, பிப்.28: தமிழக அரசு பொதுமக்களின் நலனிற்காக எண்ணற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, அறிவுறுத்தலின்படி, திருமயம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி, திருமயம் ஊராட்சி ஒன்றியம், நெய்வாசல் ஊராட்சியில், முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.71.9 லட்சம் மதிப்பீட்டில் மஞ்சினிப்பட்டி சுந்தரக்கருப்பர் கோவில் தார்ச்சாலை பணி மற்றும் சேதுராபட்டி ஊராட்சியில் ரூ.34.41 லட்சம் மதிப்பீட்டில் திருநாடன்பட்டி சாலை பணிகளை, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நெய்வாசல் ஊராட்சியில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.15.03 லட்சம் மதிப்பீட்டில் சுந்தரக்கருப்பர் கோவில் முதல் தம்பிபுரம் சாலை வரை ஓரடுக்கு மெட்டல் சாலையின் தரத்தினை, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இச்சாலையினை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக தரமாக போடப்பட்டுள்ளது குறித்தும், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவாக கொண்டுவருவது குறித்தும் ஆய்வு செய்தார். எனவே தமிழக அரசால் பொதுமக்களின் நலனிற்காக செயல்படுத்தப்படும் இதுபோன்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த ஆய்வுகளின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் பரமசிவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரசமணி, நளினி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 2021-22ஆம் ஆண்டில் 85 பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டு 68 தரிசு நில தொகுப்புகள் அமைக்கப்பட்டது.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு