136 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி வாகனங்கள்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார்

கும்மிடிப்பூண்டி: ரூ.36 லட்சத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 136 பேட்டரி வாகனங்களை டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏவிடம் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 3 சக்கர வாகனங்கள் மற்றும் பேட்டரி வாகனம், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ சென்னை பெட்ரோல் கெமிக்கல் மற்றும் அலுமினிகோ ஆகிய இரண்டு நிறுவனங்களிடம் சிஎஸ்ஆர் தொகையிலிருந்து கும்மிடிப்பூண்டி பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து தர வேண்டும் என சில மாதங்களுக்கு முன்பு வலியுறுத்தினார்.

இதை ஏற்று கொண்ட நிறுவனங்கள் கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை, பெரியபாளையம், பொன்னேரி, மீஞ்சூர், அத்திப்பட்டு, பழவேற்காடு, ஆரம்பாக்கம், ஊத்துக்கோட்டை ஆகிய சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 136 மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்தனர். பின்னர் கும்மிடிப்பூண்டி கவரப்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிக்கான வாகனம் வழங்கும் விழா நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். நிறுவனத்தின் நிர்வாகிகள் ரோஹித் குமார் சாம்சன், ஊராட்சி மன்ற தலைவர் நமச்சிவாயம், ஒன்றிய கவுன்சிலர் இந்திரா திருமலை, மாவட்ட துணை செயலாளர் ரமேஷ், பொது குழு உறுப்பினர் மாதர்பாக்கம் குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் மணிபாலன், முர்த்தி, பூண்டி சந்திரசேகர், சக்திவேல், ஜான், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பேட்டரி சைக்கிள்கள், காலுறை, கையுறை, உள்ளிட்ட பல்வேறு விதமான உபகரணங்களை ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் 136 மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது