வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் மக்கள் நீதிமன்றங்களில் 2,317 வழக்குகளுக்கு தீர்வு: பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 22.43 கோடி நிவாரணம்

வேலூர், மார்ச் 11:வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் 20 அமர்வுகளில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2,317 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 22 கோடியே 43 லட்சத்து 67 ஆயிரத்து 389 நிவாரணமாக வழங்கப்பட்டது.தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை நாடு முழுவதும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் 20 அமர்வுகள் இதற்காக ஏற்படுத்தப்பட்டன.இவற்றில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், அசல் வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள், காசோலை வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், குடும்ப நல வழக்குகள் மற்றும் தொழிலாளர் நல வழக்குகள் என விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 2,484 வழக்குகளில் 299 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் ரூ. 2 கோடியே 17 லட்சத்து 25 ஆயிரத்து 999 நிவாரணமாக வழங்கப்பட்டது.

அதேபோல் நீதிமன்ற நிலுவையில் உள்ள 6,832 வழக்குகளில் 2018 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 20 கோடியே 26 லட்சத்து 41 ஆயிரத்து 393 நிவாரணமாக வழங்கப்பட்டது. இவ்வாறு மொத்தம் 2,317 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு மொத்தம் ரூ. 22 கோடியே 43 லட்சத்து 67 ஆயிரத்து 389 நிவாரணமாக வழங்கப்பட்டது.மக்கள் நீதிமன்றத்தில் மாவட்டத்தில் உள்ள நீதிபதிகள், வழக்கறிஞர்கள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் மற்றும் வழக்குகளில் தொடர்புடையவர்கள் கலந்து கொண்டனர்

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை