தமிழ்நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரம் குறித்து அறிய காஷ்மீரை சேர்ந்த 132 இளைஞர்கள் நீலகிரி வருகை

ஊட்டி : நேரு யுவகேந்திரா சார்பில் ஊட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாமில் காஷ்மீர் மாநில இளைஞர்கள் 130 பேர் கலந்து கொண்டுள்ளனர். ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஆகியவை சார்பில் தமிழ்நாட்டின் சிறப்புகள், பாரம்பரியம், கலை, கலாச்சாரம், நீலகிரி மாவட்டத்தின் பாரம்பரியம் உள்ளிட்டவைகள் குறித்து காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் அறிந்து கொள்ளும் வகையில் காஷ்மீர் இளைஞர்கள் பரிமாற்ற நிகழ்ச்சி என்ற தலைப்பில் முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக், குப்வாரா, பாரமுல்லா, பட்கம், ஸ்ரீநகர் மற்றும் புல்வாமா ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த 132 இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதற்காக அவர்கள் நீலகிரிக்கு வந்துள்ளனர். இவர்கள் ஊட்டியில் உள்ள இளைஞர் விடுதியில் தங்கியுள்ளனர்.இம்முகாம் துவக்க விழா நேற்று நடந்தது. தமிழ்நாடு நேரு யுவகேந்திரா மாநில இயக்குநர் குலின் அகமது தலைமை வகித்து முகாமினை துவக்கி வைத்து பேசினார். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா, தோட்டக்கலை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, நீலகிரி மாவட்ட ரெட்கிராஸ் தலைவர் கேப்டன் மணி, நேரு யுவகேந்திரா மாவட்ட அலுவலர் ஆஷிஷ், பொறுப்பாளர் ரஞ்சித், பிரவீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நேற்று துவங்கிய இம்முகாம் வரும் 15ம் தேதி வரை நடக்கிறது. இன்று முதல் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, பழங்குடியின மக்கள் வசிக்க கூடிய கிராமங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு இளைஞர்கள் அழைத்து செல்லப்பட உள்ளனர். மேலும் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா