காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு 1,30,000 கனஅடியாக அதிகரிப்பு!

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு 1,30,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 1,00,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 30,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஹேமாவதி அணையில் 77,000 கன அடி வெளியேற்றப்படுவதால் கே.ஆர்.எஸ். அணைக்கு ஒரு லட்சம் கனஅடி நீர்வரத்து அதிகரித்துள்ளது. வயநாடு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் கபினி அணைக்கான நீர்வரத்து 20,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கபினி, ஹேமாவதி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடர்வதால் காவிரியில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடக அணைகளில் இருந்து நீர் வெளியேற்றம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கபினியின் நீர்ப்பிடிப்பு பகுதியான வயநாட்டிலும், ஹேமாவதி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை தொடர்கிறது. மூடிகெரே பகுதியில் 5.6 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது, கடந்த 30 மணி நேரத்தில் 30 செ.மீ. மழை பெய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: SETC மேலாண் இயக்குநர் தகவல்!

வரும் 21ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட 30 தமிழர்கள் இன்று டெல்லி திரும்புகின்றனர்: தமிழக அரசுக்கு பாராட்டு