13 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

 

விருதுநகர், மே 9: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 13 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், ரேசன்கார்டு, வேலைவாய்ப்பு,முதியோர் உதவித்தொகை, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை கோரி பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்களை துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 13 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள், தாட்கோ மூலம் 7 தொழில் முனைவோருக்கு வெள்ளாடு, பால்பண்ணை உள்ளிட்ட தொழில்களுக்கு ரூ.6.81 லட்சம் மானியத்தில் கடனுதவி, 53 தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை, சமூக நலத்துறை மூலம் ஒருவருக்கு இலவச தையல் இயந்திரம் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை