10, 12ம் வகுப்பு மாணவர்கள் கேட்டரிங் டெக்னாலஜி படிக்க இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

 

நாகப்பட்டினம், மே1: நாகப்பட்டினம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிட மற்றும் பழங்குடி இன மாணவர்கள் கேட்டரிங் டெக்னாலஜி படிக்க தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன் பெறலாம் கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன மாணவர்கள் ஹோட்டல் மேனேஜ்மென், கேட்டரிங் டெக்னாலஜி ஆகியவற்றில் மூன்று வருட முழுநேர பட்டபடிப்பு மற்றும் பட்டயப்படிப்பில் சேர்ந்து படித்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சார்ந்த மாணவர்கள் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பிஹ்ல் 45 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ. 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்படிப்பிற்கான செலவினம் தாட்கோவால் ஏற்கப்படும். விருப்பம் உள்ள மாணவர்கள் தாட்கோ இணையதளமான www.tahdco.com செய்து பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

சீர்காழியில் இடிமின்னல் தாக்கி 30 டிவிக்கள் சேதம்

சீர்காழி, மே 1: சீர்காழி அருகே நேற்று மதியம் திடீரென மின்னலுடன் கூடிய இடி தாக்கியதில் 30 வீடுகளில் டிவிக்கள் சேதம் அடைந்தன.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை நேற்று காலை வரை விட்டுவிட்டு பெய்தது. அப்போது, சீர்காழி திருக்கோலக்கா பகுதிகளில் நேற்று மதியம் திடீரென மின்னலுடன் கூடிய இடி தாக்கியது. அப்போது, 30 வீடுகளில் டிவிக்கள் பழுதாகி சேதமடைந்தன. மேலும், 20க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்விசிறி பழுதானது. சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் தொடர் வெயில் தாக்கத்தில் தவிர்த்து வந்த பொது மக்களுக்கு திடீர் மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தியது ஒருபுறம் இருந்தாலும், மின்னல் தாக்கி மின்சாதன பொருட்கள் சேதமடைந்தது அனைவரையும் வேதனை அடைய செய்துள்ளது

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்