தமிழ்நாடு முதலமைச்சர் திறனறி தேர்வு பெரம்பலூரில் 1280 மாணவர்கள் எழுதினர்

*79 பேர் ஆப்சென்ட்

பெரம்பலூர் : பெரம்பலூரில் 6 மையங்களில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் திறனறித் தேர்வை 1280 பேர் எழுதினர். இதில் 79 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
தமிழக அளவில் நேற்று (4ம் தேதி) தமிழ்நாடு முதலமைச்சர் திறனறித் தேர்வு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு நடத்தப்பட்டது. இதனையொட்டி தற்போது 11ஆம் வகுப்பு அரசு மேல் நிலைப் பள்ளிகளில் படிக் கும் மாணவ,மாணவிய ருக்கு, அவர்கள் முந்தைய வகுப்புகளில் (6,7,8,9,10 வகுப்புகள்) படித்த கணிதம், அறிவியல், சமூகஅறிவியல் ஆகிய மூன்று பாடங்களில் இருந்து வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு, தமிழக அளவில் நேற்று (4ம் தேதி) அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வு பள்ளிக் கல்வித்துறை சார்பாக நடத்தப்பட்டது.

இந்தத் தேர்வில் தமிழக அளவில் தேர்ச்சி பெறும் 500 மாணவர்கள், 500 மாணவிகள்ஆகியோருக்கு ஆண்டுக்கு ரூ10 ஆயிரம் என பதினோராம் வகுப்பிலும், 12ம் வகுப்பிலும், இளங்கலை பட்ட வகுப்புகள் முடிக்கும் வரையிலும் சிறப்பு உதவித் தொகையாக வழங்கப்பட உள்ளது. இதன்படி கலை அறிவியல் பட்டம் பயிலும் மாணவ மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் என இளங்கலை பட்டம் முடிக்கும்வரையென ரூ50 ஆயிரமும், பொறியியல் பட்டம்பயிலும் மாணவ, மாணவியருக்கு, ஆண்டுக்கு ரூ10ஆயிரம் என பட்டம் முடிக்கும் வரை ரூ 60 ஆயிரமும், மருத்துவ பட்டம் பயிலும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ10ஆயிரம் என பட்டம் முடிக்கும் வரையென ரூ70 ஆயிரமும் வழங்கப்படும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இந்தத் தேர்வினை அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பதினோராம் வகுப்பில் படிக்கும் 519 மாணவர்கள், 840 மாணவிகள் என மொத்தம் 1359 பேர் 6தேர்வு மையங்களில் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக காலையில் கணிதப் பாடத்திற்கும், மதியம் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்க ளுக்கும் தேர்வுகள் நடத்தப் பட்டது.

இதன்படி நேற்று, பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மையத்தில் 264பேர், பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல் நிலைப்பள்ளி மையத்தில் 231பேர், அரும்பாவூர் அரசு மேல்நிலைப் பள்ளி மையத்தில் 237பேர், குரும்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளி மையத்தில் 152பேர், குன்னம் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி மையத்தில் 192பேர், லெப்பைக்குடிகாடு அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி மையத்தில் 204பேர் என மொத்தம் 6 தேர்வு மையங்களில், 472 மாணவர்களும், 808 மாண விகளும் எனமொத்தம் 1280 பேர்கள் கலந்து கொண்டு தேர்வெழுதினர். 47 மாண வர்கள், 32 மாணவிகள் என மொத்தம்79பேர் தேர்வெழு திட வரவில்லை.

அதிகாரி ஆய்வு

தேர்வு மையங்களை பெரம் பலூர் மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர் (பொ) அண்ணாதுரை, மாவட்ட கல்வி அலுவலர் (இடை நிலை-பொறுப்பு) முருகேசன் ஆகியோர் பெரம்ப லூர், குரும்பலூர், அரும்பா வூர் ஆகிய 3 அரசு மேல் நிலைப்பள்ளி தேர்வு மைய ங்களை நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.

Related posts

சந்தேகத்திற்கிடமாக இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக இலங்கை மீனவர்கள் 3பேர் கைது

பிரதமர் மோடிக்கு ஏ.சி.சண்முகம் பிறந்தநாள் வாழ்த்து..!!

ராகுல் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசு அறிவித்த எம்.எல்.ஏ மீது வழக்கு