126வது வார்டு கவுன்சிலர் தந்தை மறைவு: சோனியா, ராகுல் இரங்கல்

சென்னை: இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய தேசிய பொதுச்செயலாளர் ரவீந்திரதாஸ் மற்றும் சென்னை மாநகராட்சி 162வது வார்டு கவுன்சிலர் அமிர்தவர்ஷினியின் தந்தை எம்.எஸ்.ராஜேந்திரன்   (78), காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் காமராஜர் உடன் அரசியல் பயணம் செய்தவர். அவரது சிஷ்யனாக இருந்து பணியாற்றி, அவர் மீது உள்ள  பற்றினால் காமராஜர் தேசிய இயக்கத்தை ஆரம்பித்து, பின்னர் அதை காங்கிரசில் இணைத்து கொண்டார். மேலும் காமராஜர் கொடிகாத்த குமரன் அறக்கட்டளை, அல்போன்சா டிரஸ்ட் போன்ற தொண்டு நிறுவனங்களை நடத்தி மக்களுக்கு சேவை செய்து வந்தவர். காமராஜர் கம்பெனி என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் மூலம் வாடாத பூக்கள், கொடி காத்த குமரன்,  ஜாதிகள் இல்லையடி பாப்பா போன்ற படங்களை தயாரித்துள்ளார். இவர் கடந்த 4ம் தேதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இயற்கை எய்தினார். இவரது மறைவிற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி எம்.பி மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் மற்றும் முன்னனி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்