125 மணி நேரம் நடந்தே பிரசாரம்: மாரத்தான் நாயகன் மா.சுப்பிரமணியன் உற்சாகம்

சென்னை: சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் கடந்த மார்ச் 14ல் தனது வாக்குச்சேகரிக்கும் பிரசார பயணத்தைத் தொடங்கினார். மார்ச் 31ம் தேதி முதல் தொகுதியில் உள்ள அனைத்து வட்டங்களிலும் காலை 7 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 9 மணி வரையும் நாளொன்றுக்கு 10 மணிநேரம் அனைத்து தெருக்களிலும் உள்ள வாக்காளர்களின் இல்லங்களுக்கு சென்று வாக்காளர்களை சந்தித்து வருகிறார். அதன்படி 14 வட்டங்களிலும் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வீதம் 13 நாட்களில் 125 மணிநேரம் நடந்தே சென்று வாக்கு சேகரித்துள்ளார். தொகுதி முழுவதும் நடந்தே சென்று ஒரு சுற்றுசுற்றி தொகுதியின் களநிலவரத்தையும், பொதுமக்களின் அன்பு, பேராதரவு, உற்சாக வரவேற்பு அடிப்படையில் தன்னை எதிர்த்துப்போட்டியிடும் வேட்பாளரைவிட 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக சைதாப்பேட்டையில் வெற்றி பெற்று வரலாறு படைக்கும் என்பதை தன்னடக்கத்தோடு தெரிவித்துள்ளார். இந்த வாக்கு சேகரிப்பில் திமுக சைதை மேற்கு பகுதிச்செயலாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் சைதை சம்பத், மு.எம்.சி வில்லியம்ஸ், காங்கிரஸ் கோகுல், செல்வக்குமார் விசிக ஜேக்கப், பாண்டுரங்கன், மமக ஜாபர், மதிமுக ப.சுப்பிரமணி உள்ளிட்ட கூட்டணி கட்சிகள், திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்….

Related posts

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டியலின பேராசிரியைக்கு பதவி மறுப்பு: விசாரணை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்

கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையம், சேலம் ஏற்காட்டில் புதிய போக்குவரத்து காவல் நிலையங்கள் உருவாக்கப்படும் :முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கள்ளச்சாராயம் தயாரிப்பு, விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை… ரூ. 10 லட்சம் அபராதம் : தமிழகத்தில் புதிய சட்டம்