போடி, ஆக. 27:தேனி மாவட்டத்தில் போடி, கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. சாலை, நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. போடி உத்தமபாளையம் மாநில நெடுஞ்சாலையில் அதிக வாகனப் போக்குவரத்தாலும், மக்கள் தொகை அதிகரித்து வருவதாலும் அடிக்கடி நெரிசல்களும் போக்குவரத்து தடைகளும் ஏற்பட்டு வருகிறது.

இதனால் மாநில நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியத்துறையினரும் இணைந்து, போடி பஸ் நிலையம் தேவர் சிலை பகுதியிலிருந்து மெயின் ரோடு, ரெங்கநாதபுரம் வழியாக மேல சொக்கநாதபுரம் விலக்கு அரசு பொறியியல் கல்லூரி வரையில் 2 கிமீ தூரத்தில் சாலை இருபுறங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின் போஸ்ட்களை தள்ளி வைத்திடவும், சாக்கடை மற்றும் மழைநீர் செல்ல கால்வாய் வெட்டி கான்கிரீட் தடுப்புகள் அமைப்பது என ஆய்வு செய்து முடிவு செய்யப்பட்டது.

அதன்படி முதற்கட்டமாக போடி மேல சொக்கநாதபுரம் இடையே கரட்டிப்பட்டி பிரிவிலிருந்து, கிருஷ்ணா நகர் வரையில் சாலையோரத்தில் மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்ல கால்வாய் அமைப்பதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related posts

திரவுபதியம்மன் கோயிலுக்கு சொந்தமான ₹35 லட்சம் மதிப்புள்ள வீடு மீட்பு அறநிலையதுறை அதிகாரிகள் சீல் வைத்தனர் வேலூர் வேலப்பாடியில் நீதிமன்ற உத்தரவின்பேரில்

வரத்து அதிகரிப்பால் பீன்ஸ் விலையில் சரிவு வேலூர் நேதாஜி மார்க்கெட்டில்

ஐஎப்எஸ் நிதிநிறுவன ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை வேலூரில் நிதி நிறுவன மோசடியால் விரக்தி