12,000 மரக்கன்றுகள் நட வனத்துறை நடவடிக்கை

சேந்தமங்கலம்: எருமப்பட்டி அடுத்த தலைமலை அடிவாரத்தில், 12 ஆயிரம் மரக்கன்றுகளை நட வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து வனத்துறை ரேஞ்சர் பெருமாள் கூறுகையில், ‘எருமப்பட்டி வட்டாரம் தலை மலை அடிவாரத்தில், மிகப்பெரிய வனப்பகுதி உள்ளது.இதே போல வடமத்தூர் வன பகுதி ஆகியவற்றின் தென்மேற்கு பருவமழை காலங்களில், நபார்டு திட்டத்தின் மூலம் 12ஆயிரம் மரக்கன்றுகளை நட வனத்துறை மூலம் முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக எருமைப்பட்டி வனத்துறை அலுவலகத்தில் நாவல், அரசு, வேப்பன், உடியன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வகை கொண்ட மரக்கன்றுகளை நடவு செய்து வளர்க்கப்பட்டு வருகிறது. அதற்காக வனப்பகுதியில் குழிகள் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் பருவ மழை தொடங்கியவுடன், வனப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்படும்,’ என்றார்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி