1200 ஸ்டாம்புடன் கண்காட்சி கலெக்டர் தகவல்

கரூர், செப். 28: கரூர் அரசு அருங்காட்சியகத்தில் உலக தபால் தினத்தை முன்னிட்டு தபால்தலை கண்காட்சி நடைபெற்றது. கருர் அரசு அருங்காட்சியகத்தில் ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு தலைப்புகளில் நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், உலக தபால் தினத்தை முன்னிட்டு அருங்காட்சியகத்தில் நேற்று முதல் அக்டோபர் 11ம்தேதி வரை தொடர்ந்து 15 நாட்கள் தபால் தலை கண்காட்சி நடைபெறுகிறது.இதில், இந்திய அஞ்சல் தலைகள் மற்றும் வெளிநாட்டு அஞ்சல் தலைகள் உட்பட 1200 தபால் தலைகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. கரூர் மாவட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். அருங்காட்சியக காப்பாட்சியர் குணசேகரன் மற்றும் பணியாளர்கள் கண்காட்சி ஏற்பாடு செய்திருந்தனர்.

 மாநகராட்சி அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு கூட்டம் நடத்தப்பட்ட விபரங்கள் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
 குழந்தைகளுக்கான உதவி மையம் எண் 1098க்கு வந்த புகார்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்ட விபரங்கள் கேட்டறியப்பட்டது.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை