12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தொற்று அதிகரிக்கவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

திருமயம்: தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தொற்று அதிகரிக்கவில்லை. என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே தனியார் கல்லூரியில் நடந்த தடுப்பூசி முகாமை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய கட்டுமான பணிகள் தரமானதாக உள்ளதா என்பதை ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக்காலத்தில் தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரிகளுக்கு முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதா, விதிமீறி வழங்கப்பட்டுள்ளதா, சொந்த கட்டிடத்தில் அல்லது வாடகை கட்டிடத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கேற்ப மருத்துவமனை கட்டிடங்கள் சீரமைப்பதற்கான அறிவிப்புகள் மானிய கோரிக்கையில் வெளியாகும். எலி பேஸ்ட் தடை செய்வது குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தொற்று அதிகரிக்கவில்லை. வழக்கம் போல்தான் உள்ளது. குழந்தைகளுக்கு பாதிப்பு வந்தாலும் எசிம்டமெட்டிக் முறையில்தான் உள்ளது. அதனால் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு முறையான ஏற்பாடுகளை முதல்வர் நேரடியாக பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அறிக்கைக்கு ஏற்ப சட்டவல்லுனர்களை கலந்து ஆலோசித்து நடப்பு சட்டமன்ற கூட்டத்திலேயே நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 7சதவீதம் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

தரகம்பட்டி அருகே கூனமநாயக்கனூரில் பாரம்பரிய மாடு மாலை தாண்டும் திருவிழா

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : ஜூலை 8-ம் தேதி மாலை 6 மணியில் இருந்து வாக்குப்பதிவு முடியும் வரை மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள் வெளியீடு!!

மணப்பாறை அருகே காட்டெருமை முட்டி முதியவர் உயிரிழப்பு..!!