12 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

 

ராமநாதபுரம், பிப். 2: ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: ராமநாதபுரம் வருவாய் அலகில் வட்டாட்சியர் நிலையில் நிர்வாக நலன் கருதி, 12 பேருக்கு பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, ராமநாதபுரம் தாசில்தார் ஸ்ரீதரன் முதுகுளத்தூர் ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தாராகவும், முதுகுளத்தூர் ஆதி திராவிடர் நலத்துறை தாசில்தாராக இருந்த சாந்தி, பரமக்குடி தாசில்தாராகவும், பரமக்குடி தாசில்தாராக இருந்த ரவி, ராமநாதபுரம் டாஸ்மாக் கிடங்கு மேலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல, பரமக்குடி நகர நிலவரித் திட்டம் தனி தாசில்தாராக இருந்த சேகர், பரமக்குடி சப்கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும், பரமக்குடி சப்கலெக்டரின் நேர்முக உதவியாளராக இருந்த வரதன், ராமநாதபுரம் கேபிள் டிவி தனி தாசில்தாராகவும், ராமநாதபுரம் டாஸ்மாக் கிடங்கு மேலாளர் வரதராஜ், ராமேஸ்வரம் தாசில்தாராகவும், ராமேஸ்வரம் தாசில்தார் பாலகிருஷ்ணன் ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் முன்னாள் ஆர்டிஓ நேர்முக உதவியாளர் பார்த்தசாரதி, ராமநாதபுரம் நில எடுப்பு தனி தாசில்தாராகவும், நில எடுப்பு தனி தாசில்தார் பாலசரவணன், திருவாடனை நில எடுப்பு தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பரமக்குடி மண்டல துணை தாசில்தார் கோகுல்நாத், பரமக்குடி நகர நிலவரி திட்ட தனி தாசில்தாராகவும், ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வரவேற்பு துணை தாசில்தார் ஜெயசித்ரா ராமநாதபுரம் நகர நிலவரித் திட்ட தனி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்