12 சட்ட மசோதாக்கள் பேரவையில் நிறைவேற்றம்

சட்டப் பேரவையில் நேற்று ஒரே நாளில் 12 சட்ட முன்வடிவுகள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. தமிழக சட்டப் பேரவையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்ட  சட்ட முன்வடிவுகள் விவரங்கள்: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும்  ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குமுறைப்படுத்தும் சட்ட முன்வடிவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள்5ம் திருத்தம்) சட்ட முன்வடிவையும், அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்ப் பல்கலைக் கழக (2ம் திருத்தம்) சட்ட முன்வடிவையும், அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழ்நாடு மதுவிலக்கு திருத்த சட்ட முன்வடிவு,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலை தயாரிப்புகள்திருத்த சட்ட முன்வடிவு, அமைச்சர் பழனிவேல்ராஜன், தமிழ்நாடு நிதி ஒதுக்கச் சட்ட முன்வடிவு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, மாவட்ட நகராட்சிகள் திருத்த சட்ட முன்வடிவு உள்பட 12 சட்ட முன்வடிவுகள் ஒரே நாளில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது. …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை