12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்க!: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்..!!

டெல்லி: மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேர் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேரின் சஸ்பெண்டை கண்டித்தும், உத்தரவை ரத்து செய்யக்கோரியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர். இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்ததாவது, இன்று திரிணாமுல் உள்ளிட்ட 16 கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். 12  மாநிலங்களவை உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எதிர்கட்சிகளிடம் பிளவு ஏற்பட்டது போன்ற செய்திகளை பாஜக பரப்புகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளும் பிரச்சனைகளின் அடிப்படையில் ஒன்றுபட்டு நிற்கிறோம். அனைவருடனும் இணைந்து பணியாற்ற காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது என்று தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மல்லிகா அர்ஜுனா கார்கே, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, உள்ளிட்ட எதிர்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 உறுப்பினர்களும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு 2வது நாளாக தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். …

Related posts

ஜூலை 23-ல் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல்..!!

10 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

நீட் கலந்தாய்வு ஒத்திவைப்பு மூலம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி: பிரதமர் மோடி, ஒன்றிய கல்வி அமைச்சருக்கு காங்கிரஸ் கண்டனம்