12 ஆறுகளில் இருந்து கொண்டு வந்த புனித நீருக்கு சிறப்பு பூஜை

ஓசூர், ஜூன் 27: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக 12 ஆறுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஓசூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சந்திரசூடேஸ்வரர் கோயிலில்இ புதிதாக கட்டப்பட்டுள்ள ஏழு நிலை கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நாளை(28ம் தேதி) நடைபெற உள்ளது. விழாவில் பல்வேறு இடங்களிலிருந்து கொண்டு வரப்படும் மலர்கள் ஹெலிகாப்டர் மூலம் தூவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கும்பாபிஷேகத்திற்கு வருகை தரும் பக்தர்கள் மீது தெளிக்க, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஓடும் கங்கை, யமுனை, நர்மதை, கோதாவரி, காவிரி, துங்கபத்ரா, மானசரோவர் உள்ளிட்ட 12 புனித நதிகளில் எடுக்கப்பட்ட புனித நீர் ஓசூருக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த புனித நீர் ஓசூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து வாகனத்தில் ஏற்றி கும்பாபிஷேகம் நடைபெறும் சந்திரசூடேஸ்வரர் கோயிலுக்கு மேளதாளம் முழங்க கொண்டு செல்லப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். புனித நீருக்கு வேத விற்பன்னர்கள் மூலம் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து, கும்பாபிஷேக விழாவில் ஹெலிகாப்டர் மூலம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட உள்ளதாக விழா குழுவினர் தெரிவித்தனர்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு