12ம் வகுப்பு தேர்வு தேதிக்கு முன் மாணவர்கள் படிக்க நிச்சயம் கால அவகாசம் வழங்கப்படும்!: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி..!!

தஞ்சை: 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு முன்பு மாணவர்கள் படிப்பதற்காக கால அவகாசம் நிச்சயம் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி அளித்துள்ளார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்களை அவர் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கு முன்பு மாணவர்கள் படிப்பதற்கு நிச்சயமாக போதிய அவகாசம் வழங்கப்படும் என்றார்.
தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் 5 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருவதாகவும், அவர்களின் நிலை குறித்து முதலமைச்சரின் கவனத்துக்கு நிச்சயம் எடுத்து சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறிப்பிட்டுள்ளார். அதேபோல தமிழகம் முழுவதும் உள்ள முடித்திருந்தும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்தும் முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்து சென்று உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே சொன்னது போன்று நீட் தேர்வை நிச்சயமாக எந்த காலத்திலும் தமிழகத்தில் நுழையவிட போவதில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை