11 மருத்துவ கல்லூரிகளுக்கு உபகரணங்கள் வாங்க ரூ.94 கோடி ஒதுக்கீடு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 11 மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.94 கோடியே 51 லட்சத்து 2,510 ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அரசாணை: 2022-23ம் ஆண்டுக்கான மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கான நிர்வாக மற்றும் நிதி அனுமதியை வழங்க மருத்துவக் கல்வி இயக்குநர் முன்மொழிவு கடிதம் அனுப்பி இருந்தனர். அந்த கடிதத்தில் நோயியல் துறை, நுண்ணுயிரியல் துறை, மருந்தியல் துறை, தடயவியல் துறை, சமூக மருத்துவ துறை உள்ளிட்ட 5 துறைக்கு நிதி ஒதுக்க வேண்டும்.

நோயியல் துறைக்கு ஒரு கல்லூரிக்கு 3,69,87,161 ரூபாயும், நுண்ணுயிரியல் துறைக்கு 1,10,34,442 ரூபாயும், மருந்தியல் துறைக்கு 74,00,970 ரூபாயும், தடயவியல் துறைக்கு 2,37,34,576 ரூபாயும், சமூக மருத்துவ துறைக்கு 67,61,261 ரூபாயும் என மொத்தம் ஒரு கல்லூரிக்கு ரூ.8கோடியே 59 லட்சத்து 18,410 ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைப்பட்டது. மருத்துவக் கல்வி இயக்குநர் கோரிக்கையை கவனமாக ஆய்வு செய்த அரசு இயக்குநர் கோரிய நிதியை ஒதுக்க ஒப்புதல் அளித்து ஒரு கல்லூரிக்கு ரூபாய் 8,59,18,410 என 11 கல்லுரிக்கு ரூ.94 கோடியே 51 லட்சத்து 2,510 ஒதுக்கீடு செய்ய நிர்வாக அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு