10ம் வகுப்பு பொதுத்தேர்வு புழல் சிறையில் 39 கைதிகள் எழுதினர்

சோழிங்கநல்லூர்: புழல் சிறையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 39 கைதிகள் பங்கேற்று தேர்வு எழுதினர். தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. தமிழகத்தில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளும் அரசுப் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். அதன்படி, புழல் தண்டனை சிறையில் 17 கைதிகளும், விசாரணை சிறையில் 17 கைதிகளும், பெண்கள் சிறையில் 5 பெண் கைதிகளும் என மொத்தம் 39 கைதிகள் நேற்று புழல் தண்டனை சிறையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர். இதற்கான ஏற்பாடுகளை சிறைத்துறை துணைத் தலைவர் முருகேசன் மேற்கொண்டார்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு