பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: அரசுத் தேர்வு இயக்ககம் அறிவிப்பு

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களின் நகலினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளல், மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது. அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிக்கை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள் நகலினை இன்று பிற்பகல் 3 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று Notification பகுதியில் SSLC, April 2024- Scripts Download என்ற வாசகத்தினை Click செய்தால் தோன்றும் பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த ேததியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் “Application for Retotalling/Revaluation” என்ற தலைப்பினை Click செய்து வெற்று விண்ணப்பித்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். தேர்வர்கள் இவ்விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து நாளை பிற்பகல் 3 மணி முதல் வரும் 10ம் தேதி மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தை மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.

தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களை ஒப்படைத்து அதற்குரிய கட்டணத் தொகையை பணமாக செலுத்த வேண்டும். அதன்படி மறுமதிப்பீடு பாடம் ஒவ்வொன்றிற்கும் ரூ.505, மறு கூட்டல் பாடம் ஒவ்வொன்றிற்கும் 205 ஆகும். இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* தேர்வர்கள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து நாளை பிற்பகல் 3 மணி முதல் வரும் 10ம் தேதி மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
* மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தை மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும்.
* மறுமதிப்பீடு பாடம் ஒவ்வொன்றிற்கும் ரூ.505, மறு கூட்டல் பாடம் ஒவ்வொன்றிற்கும் 205 செலுத்த வேண்டும்.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு