பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு; ஹால்டிக்கெட் 24ம் தேதி இணையத்தில் கிடைக்கும்

சென்னை: பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் 24ம் தேதி தேர்வுத்துறை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை நடந்த பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவ மாணவியருக்காக ஜூலை மாதம் துணைத் தேர்வு நடத்தப்பட உள்ளன. இந்த துணைத் தேர்வு எழுத பள்ளி மாணவர்கள் தவிர தனித் தேர்வர்களும்( தட்கல் உள்பட) விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான ஹால்டிக்கெட்டுகள் வினியோகம் செய்ய தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக 24ம் தேதி பிற்பகல் தேர்வுத்துறை இணைய தளமான www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட உள்ளன. தனித் தேர்வர்கள் அந்த இணைய தளத்தில் இருந்து தங்களுக்கான ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் 25 மற்றும் 26ம்தேதிகளில் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகள் நடந்த பள்ளிகளிலேயே செய்முறைத் தேர்வு நடக்க உள்ளது. இதுகுறித்து கூடுதல் விவரம் வேண்டுவோர் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களை நேரில் அணுகி பெற்றுக் கொள்ளலாம்.

Related posts

கர்மவீரர் காமராஜர் அவர்களையும் அவர் ஆற்றிய சேவைகளையும் எந்நாளும் நினைவில் வைத்து போற்றுவோம்: டி.டி.வி. தினகரன்

ஈரானுக்கு அவசியமில்லாமல் செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்: இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தல்

ஈரான் தேசிய கொடிகளை ஏந்தியவாறு சாலைகளில் ஊர்வலம்: இஸ்ரேலுக்கு தக்க பாடம் புகட்டப்பட்டுள்ளதாக மக்கள் பேட்டி