10ம் வகுப்பு தேர்வு இன்றுடன் முடிகிறது

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து விரைவில் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த 6ம் தேதி தொடங்கியது. அதில் தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 12 ஆயிரத்து 800 பள்ளிகளை சேர்ந்த 10 லட்சம் மாணவ மாணவியர் பங்கேற்று வருகின்றனர். இவர்களுக்காக 3986 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்றுடன் இந்த தேர்வுகள் முடிவடைகின்றன. இதையடுத்து, உடனடியாக விடைத்தாள் திருத்தும் பணிகளை தொடங்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. மே இறுதியில் தேர்வு முடிகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

ஆக.11-ம் தேதி நீட் முதுநிலை தேர்வு நடைபெறும்: தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு

ஜூலை 11-க்குள் வேட்பாளர் செலவு கணக்கை தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்க உத்தரவு!!

உதகையில் படகு ஓட்டுனர்கள் திடீர் வேலை நிறுத்தம்: படகு சேவை பாதிப்பு