10 ரூபாய் நாணயங்களுடன் சுயேச்சை வேட்புமனு: புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரி: புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்தில் வேட்பாளர்கள் மனுக்களை தாக்கல் செய்து வருகி்னறனர். சுயேச்சை வேட்பாளர் ஒருவர் ரூ.25 ஆயிரம் டெபாசிட் தொகையை பத்து ரூபாய் நாணயங்கள் அடங்கிய பையுடன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அதன் விவரம் வருமாறு:
புதுவை கிருமாம்பாக்கம் பனங்காடு தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் (59). முள்ளோடையில் உள்ள மது பாரில் சப்ளையராக வேலை செய்து வருகிறார். இவர் தற்போது மூன்றாவது முறையாக நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்று காலை மனு தாக்கல் செய்தார். ஏற்கனவே கடந்த 2014 மற்றும் 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டார். இதே போன்று சட்டசபை தேர்தல்களிலும் 2014 லிருந்து மூன்று முறை போட்டியிட்டு உள்ளார்.

10 ரூபாய் நாணயம் குறித்து அவரிடம் கேட்டபோது, பத்து ரூபாய் காசு செல்லாது என்று பலர் கூறி வருகின்றனர். சில கடைகளில் வாங்கவும் மறுக்கின்றனர். அரசு விநியோகித்த இந்த பத்து ரூபாயை நான் அரசாங்கத்திடமே ஒப்படைத்துள்ளேன். இந்த காசுகளை நான் கடந்த 5 ஆண்டுகளாக சேர்த்து வைத்து தேர்தலில் டெபாசிட் பணமாக அளித்தேன் என்றார்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு