சிங்கப்பூரில் கைதான மைச்சர் ஈஸ்வரனிடம் 10 மணி நேரம் விசாரணை: ஊழல் தடுப்பு பிரிவு அதிரடி

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கைதான இந்திய வம்சாவளி அமைச்சர் ஈஸ்வரனிடம் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். ங்கப்பூரில் கடந்த 2021ம் ஆண்டிலிருந்து போக்குவரத்து அமைச்சராக பதவி வகித்து வருபவர் எஸ்.ஈஸ்வரன் (61). இந்திய வம்சாவளியான இவரை கடந்த 11ம் தேதி ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். அதே சமயம், சிங்கப்பூரின் பிரபல ஓட்டல் தொழிலதிபர் ஓங் பெங் செங்கும் கைது செய்யப்பட்டார். இருவரும் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

விசாரணை முடியும் வரை ஈஸ்வரன் கட்டாய விடுப்பில் இருக்குமாறு அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங் அறிவுறுத்தி உள்ளார். இந்நிலையில், ரெட்ஹில்ஸ் எஸ்டேட், லெங்கோக் பாருவில் உள்ள ஊழல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேற்று முன்தினம் காலை 10.50 மணி அளவில் அமைச்சர் ஈஸ்வரன் விசாரணைக்கு ஆஜரானார். பிறகு இரவு 8.48 மணிக்கு அவர் அங்கிருந்து காரில் வீட்டுக்கு திரும்பினார். சுமார் 10 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் பார்முலா 1 கார் பந்தயம் தொடர்பான ஊழலில் ஈஸ்வரனும், ஓங் பெங் செங்கும் கைதாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

Related posts

பி.டி.ஆர். கால்வாய், தந்தை பெரியார் கால்வாயிலும் பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும்: ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை