போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் 10 விமானங்களின் சேவை ரத்து

சென்னை: போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் 10 விமானங்களின் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. போதிய பயணிகள் இல்லாமல் இலங்கை, பெங்களூர், மும்பை, மதுரை, அந்தமான் உள்ளிட்ட மொத்தம் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து காலை 7.45-க்கு அந்தமான் செல்லும் ஆகாஷா ஏர்லைன்ஸ், 11.20க்கு இலங்கை செல்லும் ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பகல் 1.20க்கு, பெங்களூர் செல்லும் ஏர் இந்தியா, 1.40க்கு பெங்களூர் செல்லும் ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

காலை 7-க்கு, பெங்களூரிலிருந்து வரும் ஆகாஷா ஏர்லைன்ஸ், பகல் 12-க்கு, மும்பையில் இருந்து வரும் ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யபப்ட்டுள்ளது. பகல் 1-க்கு, அந்தமானிலிருந்து வரும் ஆகாஷா ஏர்லைன்ஸ், பகல் 2.45 க்கு, மதுரையிலிருந்து வரும் ஏர்-இந்தியா விமானம் ரத்து செய்யபப்ட்டுள்ளது. மாலை 3.40-க்கு, இலங்கையிலிருந்து வரும் ஏர் இந்தியா விமானமும் போதிய பயணிகள் இன்றி ரத்து செய்யப்பட்டது. ரத்துசெய்யப்பட்ட விமானங்களின் டிக்கெட்டுகள் வேறு விமானங்களுக்கு மாற்றப்பட்டதால் பயணிகளுக்கு பாதிப்பில்லை.

 

Related posts

திருப்பதி லட்டு விவகாரம்.. நீதிமன்றத்தை அரசியல் சுயலாபத்திற்காக பயன்படுத்துவதை விரும்பவில்லை: உச்சநீதிமன்றம்!!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதான தமிழக மீனவர்கள் 37 பேர் விடுதலை

சிறுவர்களை பலிகடாவாக்கும் சமூக விரோதிகள்; இந்தியாவில் 10 ஆண்டுகளில் சிறார் குற்றங்கள் அதிகரிப்பு: நடவடிக்கை மாற்றங்களை கண்காணிப்பது அவசியம்