108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜூன் 12: 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகத்தில் கடந்த 2008 முதல் 108 ஆம்புலன்ஸ் சேவைத்திட்டத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் பணி நேரத்தை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் வரதராஜ், சாமிவேல் மற்றும் ஓய்வு பெற்றோர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை