1013 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவக்கம்

தர்மபுரி, ஆக.25: தர்மபுரி மாவட்டத்தில், 1013 அரசு பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம், இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 51,538 மாணவ, மாணவிகள் பயன் பெறுகின்றனர். தமிழகத்தில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், 2023-2024 கல்வி ஆண்டு முதல் 31 ஆயிரம் அரசு தொடக்கப்பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 17 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் விரிவுபடுத்தி ஆணையிடப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்பட்டு வரும் 48 அரசு தொடக்கப்பள்ளிகள், 9 அரசு நடுநிலைப்பள்ளிகள், 1 உயர்நிலைப்பள்ளி என மொத்தம் 58 அரசு பள்ளிகளில், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், முதல்கட்டமாக தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் 111 தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம், 5400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(25ம் தேதி) முதல் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 1013 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 51,538 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதை முன்னிட்டு, தர்மபுரி டவுன் நகராட்சி தொடக்கப்பள்ளியில், நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கான மைய சமையற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தர்மபுரி கலெக்டர் சாந்தி நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார். மேலும், சமையற்கூடம் அமைந்துள்ள இடம், சமையல் பொருட்கள் இருப்பு அறை, குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவுகளை பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஆகியவற்றை, கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில், முதற்கட்டமாக பாலக்கோடு வட்டாரத்தில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம், 111 அரசு பள்ளிகளில் 5400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, 2ம் கட்டமாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 1013 அரசு தொடக்கப்பள்ளிகளில், 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 51,538 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், இத்திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’ என்றார்.

Related posts

திரவுபதியம்மன் கோயிலுக்கு சொந்தமான ₹35 லட்சம் மதிப்புள்ள வீடு மீட்பு அறநிலையதுறை அதிகாரிகள் சீல் வைத்தனர் வேலூர் வேலப்பாடியில் நீதிமன்ற உத்தரவின்பேரில்

வரத்து அதிகரிப்பால் பீன்ஸ் விலையில் சரிவு வேலூர் நேதாஜி மார்க்கெட்டில்

ஐஎப்எஸ் நிதிநிறுவன ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை வேலூரில் நிதி நிறுவன மோசடியால் விரக்தி