10,12ம் வகுப்பு தேர்வில் முதலிடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு

உசிலம்பட்டி, மே 28: உசிலம்பட்டியில் 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. உசிலம்பட்டி பழைய போஸ்ட் ஆபிஸ் தெருவில் உள்ள அரசு ஊழியர்கள் சங்க அலுவலக கட்டிட வளாகத்தில் உசிலம்பட்டி தொகுதியில் உள்ள அரசு பள்ளி, அரசு கள்ளர் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ,மாணவிகளுக்கு, உசிலை சிந்தனை பேரவை சார்பாக பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் சுரேஷ் வரவேற்று பேசினார். பேராசிரியர் ஜெயக்கொடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அரசு மருத்துவர் சந்திரன் தலைமை வகித்தார். பொறியாளர் அறிவழகன், தலைமை ஆசிரியர்கள் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக திருவாரூர் குற்றவியல், உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கம் பங்கேற்று 10ம் வகுப்பு, 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த 20க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகளுக்கு ரொக்கபணம் மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை