100 ரூபாய் செல்லாதா? வைரலாகும் வீடியோ

சேலம்: சேலம், நாமக்கல் மாவட்ட பகுதியில் இருந்து நேற்று காலை முதல் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலானது. திருச்செங்கோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் பதிவு செய்யப்பட்டுள்ள அந்த வீடியோவில், வாலிபர் ஒருவர் தனது பைக்கில் பெட்ரோல் அடிக்கச் சென்றுள்ளார். அங்கு 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட கேட்டுக்கொண்டு, வண்டியை நிறுத்தியுள்ளார். அந்த நேரத்தில் தனது பாக்கெட்டில் இருந்து பழைய 100 ரூபாய் நோட்டை எடுத்துள்ளார். அதனை பார்த்ததும், அந்த நோட்டு செல்லாது, அதனால பெட்ரோல் அடிக்க முடியாதுனு பங்க் ஊழியர் கூறியுள்ளார். அதற்கு அவர், ‘இந்த பழைய 100 ரூபாய் நோட்டு செல்லாதுனு யாரு சொன்னா?. மோடி செல்லாதுனு சொல்லிட்டாரா?, 2000 ரூபாய் நோட்ட தான செல்லாதுனு சொல்லியிருக்காங்க. பதில் சொல்லுங்க என்கிறார். அதற்கு பங்க்கில் இருந்த மற்றொரு ஊழியர், ‘இந்த பழைய 100 ரூவா நோட்டை வாங்கக்கூடாது, அது செல்லாதுனு மேனேஜர் சொல்லியிருக்காரு’ என்றார்.

Related posts

வினாத்தாள் கசிவு: ம.பி.யில் 10 ஆண்டு சிறை

கென்யாவில் அரசுக்கு எதிராக போராட்டம்: 39 பேர் பலி

நாமக்கல் முட்டை விலை ரூ.5.15 ஆக நீடிப்பு