10000 மீட்டர் நடை பந்தயத்தில் வெள்ளி வென்றார் அமித்

நைரோபி: உலக யு20 தடகள போட்டியின் ஆண்கள் 10,000 மீட்டர் ‘ரேஸ் வாக்’ பிரிவில்  இந்திய வீரர் அமித் கத்ரி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். கென்யா தலைநகர்  நைரோபியில்  உலக யு20 தடகள போட்டிகள் நடை பெற்று வருகின்றன. இந்த தொடரின்  கலப்பு  4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில்  த மிழக வீரர் பரத் ஸ்ரீதரன் உள்ளிட்ட இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்று பதக்க எண்ணிக்கையை  தொடங்கியது. இந்நிலையில். நேற்று நடந்த  10,000 மீட்டர் ஆடவர் நடை பந்தயத்தில் இந்திய வீரர்  அமித் கத்ரி பங்கேற்றார். அவர் ஏற்கனவே நடந்த போட்டிகளில்   40 நிமிடம், 40.97 விநாடிகளில் பந்தய தொலைவை கடந்திருந்தார். ஆட்டத்தில் பங்கேற்ற மற்ற வீரர்கள் ஏற்கனவே 41, 42, 43 நிமிடங்களை எடுத்துக் கொண்டிருந்தனர். அதிக எதிர்பார்ப்பில் இருந்த உள்ளூர் வீரர்  ஹெரிஸ்டோன் வன்யோன்யி இதற்கு முன்பு 42 நிமிடத்தில் தான் பந்தய தூரத்தை கடந்திருந்தார். எனவே, இந்த போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் உறுதி என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப  அமித்  9 கிலோ மீட்டர் வரை  முன்னிலை வகித்தார்.  ஆனால், கடைசி 2 சுற்றுகள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் வேகத்தை அதிகரித்து முந்திய ஹெரிஸ்டோன் 42 நிமிடம், 10.84 விநாடிகளில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். அமித் 2வது இடம் பிடித்து (42:17.94) வெள்ளிப் பதக்கத்தை முத்தமிட்டார். 3வது இடம் பிடித்த ஸ்பெயின் வீரர் பால் மெக்ராத் (42:26.11) வெண்கலம் வென்றார்.இந்த தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த 2வது பதக்கம் இது. போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. பதக்க பட்டியலில் கென்யா 4 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்று முதலிடத்தில் உள்ளது. பின்லாது (2-1-0), எத்தியோப்பியா (1-3-1) அடுத்த இடங்களில் உள்ளன. இந்தியா (0-1-1) 16வது இடம் பிடித்துள்ளது….

Related posts

மாநில ஜூனியர் தடகள போட்டி நாளை தொடக்கம்

டி20 உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் மாயா