1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அகஸ்தீஸ்வரர் கோயில் புனரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

கரூர், அக்.2: 1000ம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அகஸ்தீஸ்வரர் கோயிலில் ரூ.5 கோடியில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை விரைந்து முடித்து, வழிபாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர். கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், திருமுக்கூடலூரில் காவிரி மற்றும் அமராவதி ஆறுகள் கூடும் இடத்தில், 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அகஸ்தீஸ்வரர் கோயில் உள்ளது.

இக்கோயிலை புனரமைக்க, தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் ரூ.5 கோடி நிதி ஒதுக்கி, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ரூ.1 கோடியில் மூலவர் சன்னதி, அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபம் புனரமைத்தல். ரூ. 15 லட்சத்தில் அம்பாள் சன்னதி புனரமைத்தல், ரூ.1 கோடியில் சோபன மண்டபம் மீள கட்டும் பணி, ரூ.8 லட்சத்தில் மடப்பள்ளி புனரமைத்தல். ரூ. 9 லட்சம் மதிப்பில் உப சன்னதிகள் வர்ணம் பூசும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. மேலும், ரூ. 1.25 கோடி மதிப்பில் தெற்கு திருமதில் கட்டும் பணி, ரூ.25 லட்சம் மதிப்பில் மேற்கு, வடக்கு, கிழக்கு மதில் புனரமைத்தல்.

ரூ.6 லட்சம் மதிப்பில் ராஜகோபுரம் கல்காரம் புனரமைத்தல், ரூ.22 லட்சம் மதிப்பில் வசந்த மண்டபம் மீள கட்டுதல், ரூ.50 லட்சம் மதிப்பில் யாகசாலை(அபிஷேக மண்டபம்) மீள கட்டுதல், ரூ.40 லட்சம் மதிப்பில் சுப்பிரமணியர் சன்னதி மீள கட்டுதல் என ரூ.5 கோடி மதிப்பில் 11 பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டன. தற்போது, கோயில் வளாகத்தை சுற்றிலும் கோயிலை புதுப்பிக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. 2026ம் ஆண்டுக்குள் பணிகள் முடிக்கும் வகையில் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பழமை வாய்ந்த இந்த கோயிலில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்கள் வழிபாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்கம் சார்பில் புத்தக திருவிழா முன்னேற்பாடு பணிகள் கரூர் புத்தக திருவிழா 3ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் தஙகவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கரூர் மாவட்டத்தில் புத்தக திருவிழா அக்டோபர் 3ம் தேதி முதல் 13ம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெறும் பணிகளை கலெக்டர் மீ.தங்கவேல் ஆய்வு ெசய்தார். அதில், அமைக்கப்பட உள்ள புத்தக விற்பனை அரங்குகள், குடிநீர் வசதி, சிற்றுண்டி கூடம், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் வாகன நிறுத்தம், கழிவறை வசதி, மின்சாரம், தீ தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட முன்னேற்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது, எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாநகராட்சி கமிஷனர் சுதா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுஜாதா உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை