100 பவுன் நகை, 1 ஏக்கர் நிலம், கார் தந்தும்.. வரதட்சணை கொடுமையால் மனைவி மரணம் :கைதான அரசு அதிகாரி கணவன் அதிரடி சஸ்பெண்ட்

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் கொல்லம் அருகே நிலமேல் பகுதியை சேர்ந்தவர் திரிவிக்ரமன். அவரது மகள் விஸ்மையா (26). அவருக்கும், மோட்டார் வாகன துறையில் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றும் கிரன்குமாருக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் விஸ்மையா வீட்டு குளியல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரித்தனர். போலீசாரிடம் தனது மகள் தற்கொலை செய்யவில்லை என்றும், கிரன்குமாரும், அவரது உறவினர்களும் விஸ்மையாவை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு விட்டனர் என்று அவரது பெற்றோர் கூறினர். தொடர்ந்து கிரன்குமாரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை சாஸ்தான்கோட்டை குற்றவியல் முதல்வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். அவரை 14 நாள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கொட்டாரக்கரை சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே கிரன்குமார் அரசு பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக விஸ்மையாவின் தந்தை திரிவிக்ரமன் கூறியது: எனது மகள் தற்கொலை செய்ய எந்த அவசியமும் இல்லை. நானும், அவளும் நண்பர்கள் போலத்தான் பழகி வந்தோம். ஒரு முறை நான் அவளது வீட்டிற்கு சென்ற போது, கணவர் குடும்பத்தினரின் உடைகளை கைகளால் துவைத்துக்கொண்டிருந்தார். எனக்கு மன வருத்தம் ஏற்பட்டது. மறுநாளே வாசிங்மெஷின் வாங்கி கொடுத்தேன்.இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதால் விஸ்மையா எனது வீட்டுக்கு வந்தார். அப்போது கிரன்குமார் போதையில் வந்து தகராறு செய்தார். அப்போது தான் அவருக்கு மது பழக்கம் இருந்தது எனக்கு தெரியவந்தது. எனவே அவரை விவாகரத்து செய்ய மகளிடம் கூறினேன். ஆனால் கிரன்குமார் இனிமேல் குடிக்க மாட்டேன் என்று உறுதியாக கூறி, மகளை அழைத்து சென்றார். அன்று எனது மகள் வீட்டில் இருந்து சென்றிருக்காவிட்டால் தற்போது அவள் உயிருடன் இருந்திருப்பார் என்றார்.இந்த சம்பவம் தொடர்பாக மகளிர் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது. …

Related posts

மத்தியப்பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!!

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து